SRI
WWW.Tiruppavai.net
e-Edition 2016
Tamil Pasuram with English & Spanish Translationsஸ்ரீ் ஆண்டாள் திருப்பாவை

Welcome To Tiruppavai.net e-Edition 2016                                   A Tamil Tiruppavai Pasuram Web Site with English & Spanish Translation

திருப்பாவை பாசுரம் / Pasuram 25 - 27

25. The girls crave to do service and implore to get rid of
        their grief.
திருப்பாவை பாசுரம் 25
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
     ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைத்த
     கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
     அருத்தித்து வந்தொம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
     வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்
ஒருத்தி - ஒரு பெண்ணுக்கு (தேவகி); ஒருத்தி - மற்றொரு பெண்ணுக்கு (யசோதை);
தரிக்கிலான் - பொறுக்க, சகிக்க மாட்டாதவன்; கஞ்சன் - கயவன், கம்சன்;
அருத்தித்து - யாசித்து, உத்தேசித்து பிரார்த்தனை செய்து;
திருத்தக்க - பிராட்டியும் ஆசைப் படத்தக்க, லக்ஷ்மியும் விரும்பும்;
சேவகம் - வீரியம், வீரிய குணம், ஏவியதை செய்வது, குற்றேவல்;
Pasuram 25 - English Translation
Born a son to some woman and the same night
     Brought up a son concealed by some other
Thou had foiled the intent of Kanchan,
     The intolerant harbouring animosity; and had
Stood upon his stomach a fire, inspir'd terror.
     Oh! Hillock Tall, Divinity!
We have come unto Thee beseeching;
     To solicit wealth which patroness would covet;
     If Thou wouldst grant us the desire
     We would sing Thy bravery, ridding grief entire
     And be delight'd, listen and consider our damsel.
Pasuram 25 - Tradución de español
¡Oh Señor! que nació de una madre Devaki
     Y en una noche, se convirtió en
El hijo adoptivo de otra madre Yadosa;
     Que destruyó los planes de Kamsa, que estaba planeando matarle
y por esta acción le hacía sentirse irritado;
     Hemos venido a pedirle nuestra lista de deseos;
Si pudiese satisfacer nuestros deseos, cantaríamos sus riquezas sin límites
     Y su valentía y superaríamos la pena y nos alegraríamos.
26. The objects for the ritual are solicited.
திருப்பாவை பாசுரம் 26
மாலே! மணிவண்ணா மார்கழி நீராடுவான்
     மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
     பாலன்ன வண்ணத்துன் பாஞ்சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
     சாலப்பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
     ஆலின் இலையாய் அருள் ஏல் ஓர் எம்பாவாய்
மால் - இரத்தினம், ஆசைப்படத் தக்கவன், அன்பு, மலை, மேகம், அரசன்,
     மயக்குபவன், ஏமாற்றுபவன், ஜாலக்காரன், ஆசை, அரண்மனை, காமம், கருப்பு நிறம்,
     புதன் கிரகம், காற்று, பெரியவன், இந்திரன்;
மணிவண்ணா - நீலரத்னம் போன்ற வண்ணமுள்ளவன், நீலவண்ணன்;
நீராடுவான் - நீராடுவதற்காக, குளிப்பதற்காக; மேலையார் - முன்னோர்கள், பெரியோர்கள், ஆன்றோர்கள்; செய்வனகள் - செய்து வந்த, செய்யும் கிரிசைகள்;
முரல்வன - சப்திக்கும், ஒலிக்கக் கூடிய; சங்கங்கள் - சங்குகளும்;
போய்ப்பாடு - புகழ், பெரியதாய் இருக்கை, சிறப்பு வாய்ந்த; சால - மிகவும்;
கோல - அழகிய, மங்கள; விதானம் - மேலே கட்டவேண்டிய சீலைகள்;
ஆலின் இலையாய் - ஆலமர இலையில் பிரளய கால வெள்ளத்தில் உறங்கியவன்;
Pasuram 26 - English Translation
Oh! Amorous! Emerald-hued!
     If thou wouldst lend an ear
To our requisites for Margali bath a la elders observed;
     Thou shalt grant us huge conches, milky white
When trumpet'd shall bring
     The entire earth to shudder severe,
Much alike Thy Panchajanya, grand vast drum, the choir,
     Ornamental lamp, canopy, and flag to hoist;
     Lavish out gift galore to gloat,
     Thou reposed in banyan leaf afloat
     Be benevolent, listen and consider, our damsel.
Pasuram 26 - Tradución de español
¡Escuche! Señor Manivanna, que goza de nuestro amorsin límite,
     Que tiene el color del zafiro;
No solicitamos nada nuevo para nuestros votos de Margazhi;
     Necesitaríamos algunas cosas como indican
Nuestros grandes ancestros para realizar este voto;
     Por favor ofrézcanos una concha como la Panjasanyam
La que lleva usted en su mano, que es tan blanca como la leche,
     Y cuando la toca sacude todos los mundos;
Tambores gigantes, devotos que pueden cantar su elogio,
     Lámparas decorativas y sagradas, estandartes, banderas
Y un toldo para protegernos contra el frio de Margazhi;
     ¡Oh Señor! Que flotó en una hoja de Banyan como un bebé,
Por favor denos estas cosas y bendíganos con su gracia
27. Some more prize objects are claimed for their own count.
திருப்பாவை பாசுரம் 27
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப்
     பாடி பறை கொண்டு யாம் பெறு சம்மானம்
நாடு புகளும் பரிசினால் நன்றாக
     சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
     ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவார
     கூடியிருந்து குளிர்ந்து ஏல் ஓர் எம்பாவாய்
கூடார் - தம்மை அடிபணியாதவரை, எதிரிகளை, விரோதிகளை,
         கூடமாட்டோம் என்று இருப்பவர்களை;
சம்மானம் - பரிசு, அடையும் பாக்கியம், நிலைமை; சூடகம் - கைக்கு ஆபரணம், கைவளை;
தோள் வளை - வங்கி; தோடு - கம்மல்; செவிப்பூ - மாட்டல், கர்ண புஷ்பம்;
பாடகம் - காலுக்கு ஆபரணம், பாதகடகம், மற்றொரு வகை கால் அணி;
வழிவார - வழியும்படி, வழிந்து ஓடும் படி; கூடி - எல்லோரும் ஒன்றாகக் கூடி
Pasuram 27 - English Translation
The unconjunctive Thou conquer, Oh! Govinda glorious!
     Praying Thee we acquire our desire;
Shall we spell out the prize we aspire?
     Fabulous gift praiseworthy by the country;
Bracelet, shoulder-ring, ear-stud, floral, anklet,
     And several such we enjewel our body entire,
Would enrobe and follow through
     Cooked milk-rice delicious,
     Steeped in ghee poured off copious
     Which flow down the elbow, Thou amorous!
     Entranced would remain conjunct, consider our damsel.
Pasuram 27 - Tradución de español
¡Oh Señor Govinda, que derrota a todos los que no hacen la paz con usted!
     El regalo que conseguiríamos después de cantar su elogio en nuestro voto,
Seria que nos adornaríamos con ornamentos preciosos en
     Nuestras manos, orejas y piernas de manera que toda la
                             ciudad hablaría sobre eso;
Llevaríamos ropa bonita y cocinaríamos arroz con leche y grasa vegetal,
     Añadiríamos la grasa vegetal en exceso que fluiría
En nuestras manos cuando disfrutáramos esta comida deliciosa.