17. Awakening Nandagopala, Yasoda, Krishna and Balarama.
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேல் ஓர் எம்பாவாய்
அம்பரம் - ஆடை, ஆகாயம்; அறஞ்செய்யும் - தானம் செய்யும் ;
எம்பெருமான் - எங்கள் எசமானன், சுவாமி;
கொம்பனார்க்கு - வஞ்சிக் கொடி போன்ற பெண்களுக்கும்;
கொழுந்தே - துளிர்போன்ற மிக்க அழகுள்ளவளே; அறிவுறாய் - உணர்ந்து எழுவாய்;
அம்பரம் - ஆகாச வெளி; உம்பர் - தேவர்; கழல் - அணிகலன்; உம்பி - தம்பி;
Pasuram 17 - English Translation
Attire, water and food thou donate
Our patron Nandagopala arise!
Sprout of a creeing plant! Light of our clan!
Our patroness Yasoda, get enlighten'd!
Grown piercing the cosmos, Thou had meted this earth.
King of Angels! Thou shalt arise!
Shed Thy sleep, drowse no more,
Baladeva wealthy! Thy foot bright adorn'd
By gold anklet of a victor;
Junior and thyself our benefactor
Discard drowsing! Arise and consider our damsel.