SRI
WWW.Tiruppavai.net
e-Edition 2016
Tamil Pasuram with English & Spanish Translationsஸ்ரீ் ஆண்டாள் திருப்பாவை

Welcome To Tiruppavai.net e-Edition 2016                                   A Tamil Tiruppavai Pasuram Web Site with English & Spanish Translation

திருப்பாவை பாசுரம் / Pasuram 19 - 21

19. Krishna and Nappinnai are addressed --
         They compete with each other to open the doors.
திருப்பாவை பாசுரம் 19
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
     மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
     வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை
     எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லையால்
     தத்துவம் அன்று தகவு ஏல் ஓர் எம்பாவாய்
குத்து விளக்கு - நிலை விளக்கு; கோட்டுக்கால் - தந்தக்கால்;
பஞ்ச சயனம் - ஐந்து தன்மைகளைக் கொண்ட படுக்கை
             (வெண்மை, மிருது, வாசனை, அழகு, குளிர்ச்சி);
கொங்கை - மார்பகம்; மலர் - மலரையொத்த விசாலமான; மைத்தடம் - மை தீட்டிய;
தத்துவம் - ஸ்வரூபம், உண்மை, நடைமுறை, குணம், உடல் அமைப்பு, பலம்,
             வலிமை, தேகபலம், இந்திரியபலம்;
Pasuram 19 - English Translation
Kudos to Thee! settl'd on a cot ivory foot'd
     Soft silk cotton mattress with quality quintet
In glimmering light of a metal lamp and
     Inclined on the bosom of Nappinnai
Having flowerful locks bunch of blossoms bloom'd;
     Thy chest a flower bed, open Thy mouth this instant;
Thy eye graced with
     Eye-liner black, a charm;
     Let whatsoev'r time, wouldn't arouse thy groom;
     Nor howsoev'r endure a moment's separation this norm
     Is neither reality nor befitting, consider our damsel.
Pasuram 19 - Tradución de español
¡Oh Señor! Las lámparas están encendidas a su alrededor,
     Y está durmiendo en una cuna con patas de marfil y
Descansando en una cama suave,
     Con su ancho pecho entre los pechos de Nappinai,
Cuyos cabellos están adornados con muchas flores,
     Por favor despiértese;
¡Oh Nappinnai! Con ojos negros y grandes adornados con delineador
     Has decidido no despertar a tu marido Krishna, ni siquiera por un momento;
No estás lista para tolerar la separación del Señor,
     Y no corresponde con tu carácter puro lleno de infinita misericordia.
20. Once again, the Divine Couple are aroused.
திருப்பாவை பாசுரம் 20
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
     கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்
செப்பமுடையாய், திறலுடையாய் செற்றார்க்கு
     வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்
செப்பன்ன, மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்
     நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
     இப்போதே எம்மை நீராட்டு ஏல் ஓர் எம்பாவாய்
முப்பத்து மூவர் - முப்பத்து முக்கோடி; கப்பம் - நடுக்கம்;
கலி - பலமுள்ளவன், சக்தியுள்ளவன், கண்ணன்; செற்றார் - பகைத்தவர்; வெப்பம் - சூடு, துக்கம்;
விமலா - பரிசுத்தமாணவன்; செப்பன்ன - பொன்கலசம் போன்ற, பொன்குடம் போன்ற, செப்புக்குடம் போன்ற; மருங்குல் - பக்கம்; உக்கம் - பெரிய வட்ட வடிவமான விசிறி, சீறிய வேலைப்பாடு அமைந்த விசிறி, தங்கம், நெருப்பு காளை; தட்டொளி - கண்ணாடி;
Pasuram 20 - English Translation
Move ahead of thirtythree celestial beings,
     Thou forestall tremor; vanguard, Mighty; awake!
Righteous, energetic, immaculate, would persecute
     Arrogance and subjugate, Thou shalt awake!
Nappinnai damsel! With breast a la copper, soft;
     Rosy cheeks and tiny waist. Lakshmi! Thou shalt awake!
Present us Thy groom,
     Fan circular and optics;
     And bathe us right now we derelicts
     In His ocean compassion Thou mediatrix;
     Listen and consider, our damsel.
Pasuram 20 - Tradución de español
¡Oh Señor de fuerza inconmensurable!,
     Que emerge y protege a 330 millones de devas
Y sofoca cualquier problema antes de que se presente;
     Que salva a todos los devotos y destruye a sus enemigos,
Por favor despiértese;
     ¡Oh Nappinai! Que tiene pechos bien formados,
Labios rosados, cintura delgada,
     y quien es la encarnación de Lakshmi, Por favor despiértate;
Por favor ofrécele a tu señor un abanico y un espejo,
     Cuando se despierte y permítele acompañarnos para darse un baño.
21. The girls have come Lost to His qualities-beauty,
         compassion and love.
திருப்பாவை பாசுரம் 21
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
     மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
     ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
     மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமாபோலே
     போற்றியாம் வந்தோம் புகழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்
ஏற்ற - ஏற்றுக்கொள்ளும், வாங்கும்; மீதளிப்ப - மேலே வழிய; மாற்றாது - இடை விடாது;
ஆற்ற - மிகுதியாக, விசேசமாக; ஊற்றம் - திண்மை, உறுதி; மாற்றார் - எதிரிகள், பகைவர்கள்; ஆற்றாது - கதியற்று, சகிக்காமல்;
Pasuram 21 - English Translation
In vessels receptile filled to brim, grand donor cows
     Issue incessant flow of milk to counter flow;
Oh! Son of Nandagopala! Owner of such immense;
     Get enlighten'd! Thou resolute, magnanimous,
Remain pre-eminent on this earth,
     A beacon resplend aglow;
We have come lauding and hailing;
     Forlorn, sans energy, and assiduous;
     As would foes, at Thy gate unanimous,
     Have gather'd to surrender to Thy foot glorious;
     Arise! Listen and consider, our damsel.
Pasuram 21 - Tradución de español
¡Oh Señor!, el hijo de Nandagopar,
     Que posee un rebaño de vacas,
que secretan leche de sus ubres resultando en desbordamiento;
     El omnipotente que se glorifica por los Vedas,
Y cuya gloria no puede describirse por los Vedas,
     Por favor despiértese;
El señor que brilla intensamente, por favor despiértese;
     Hemos venido a la entrada de su palacio, cantando su elogio y gloria
Y nos hemos rendido ante usted como sus enemigos derrotados
     Que han perdido su poder y se han refugiado en usted.